மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

நிதிச் சிக்கலில் தவிக்கும் விமான சேவை நிறுவனங்கள்

திவாலின் விளிம்பு நிலையில் விமான நிறுவனங்கள் இருப்பதாக கூறி, அரசின் உதவியை நாடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்திய வர்த்தக, தொழில் சம்மேளனம் கடிதம் எழுதியுள்ளது.

images 16கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று பல்வேறு வெளிநாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. இதன் காரணமாக எல்லா விதமான போக்குவரத்து சாதனங்களும் முடக்கப்பட்டுள்ளன.

அனைத்து விமானங்களும் உள்நாட்டு சேவைகளையும், வெளிநாட்டு சேவைகளையும் ரத்து செய்துள்ளன. இதன் கரணமாக விமான நிறுவனங்களின் நிதி நிலைமை கவலைக்கிடம் தருவதாக அமைந்துள்ளது.

இதை சுட்டிக்காட்டி, அரசின் உதவியைக் கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் பூரிக்கும் இந்திய வர்த்தக, தொழில் சம்மேளனம் ‘பிக்கி’யின் விமான குழு தலைவர் ஆனந்த் ஸ்டான்லி கடிதம் எழுதி உள்ளார்.

images 14

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக விமானங்கள் இயங்காமல், விமான தொழில் முடங்கி உள்ளது. இதனால் விமான நிறுவனங்களின் கையிருப்பு நிதி கரையத்தொடங்கி இருக்கிறது. இது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. பல விமான நிறுவனங்கள் திவாலின் விளிம்பில் இருக்கின்றன.

எரிபொருளுக்கான கட்டணங்களை, அவற்றை சந்தையிடும் எண்ணெய் நிறுவனங்களுக்கு விமான நிறுவனங்கள் வட்டியின்றி கட்டுவதற்கான கால வரம்பு 21 நாட்களாக இருக்கின்றன.

இந்த 21 நாள் கால வரம்பை 180 நாட்களாக உயர்த்தினால் விமான நிறுவனங்களின் பணப்புழக்க நிலை பலன் அடையத்தக்க விதத்தில் இருக்கும்.

புதிய டிக்கெட்டுகளை பதிவு செய்வதை விட, பதிவுகளை ரத்து செய்வது அதிகமாக உள்ளது. கொரானா வைரஸ் பரவி வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய சரக்கு, சேவை வரியை விட, டிக்கெட்டுகளை ரத்து செய்வதால் திரும்ப செலுத்த வேண்டிய சரக்கு, சேவை வரி அதிகமாக இருக்கிறது. எனவே விமான போக்குவரத்து துறை சரக்கு, சேவை வரி செலுத்த வேண்டியதை ஒத்திவைக்க வேண்டும்.

விமான எரிபொருள் விற்பனையை சரக்கு, சேவை வரியின் கீழ் கொண்டு வர வேண்டும். விமானங்களை இயக்குவதற்கான செலவில் 40% எரிபொருள் வகைக்கு செலவிடப்படுகிற நிலை உள்ளது.

விமான நிறுவனங்கள் எரி பொருளுக்காக செலுத்துகிற சரக்கு, சேவை வரியில் இருந்து உள்கடன் பெறுவதற்கு விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அப்போது, விமானங்களின் செயல்பாட்டு செலவு குறையும்.

விமானங்களை நிறுத்துவதற்கும், தரை இறங்குவதற்கும் விமான நிலையங்களுக்கு விமான நிறுவனங்கள் கட்டணம் வழங்குவதையும், ராயல்டி உரிமை வழங்குவதையும் ரத்து செய்ய வேண்டும், எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே பயணிகளுக்கு விற்கப்பட்ட ஆனால் பயன்படுத்தப்படாத டிக்கெட்டுகளுக்கு, சுமார் 2 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாயை விமான நிறுவனங்கள் திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது

1newsnationuser4

Next Post

மது கிடைக்காததால் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த வாலிபர்கள்... 2 பேர் உயிரிழப்பு...

Sat Apr 4 , 2020
புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மது கிடைக்காததால் மீனவர்கள் இருவர் ஷேவிங் லோஷனை குடித்ததால் உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனால் அனைத்து மக்களும் தொழிலாளர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மேலும், நேர கட்டுபாடுகளுடன் அத்தியாவசிய கடைகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளும் கடந்த 10நாட்களாக மூடியுள்ளது. இதனால் குடிக்க முடியாததால் தற்கொலையும், கொலைகளும் […]
திருமணம் ஆன மறுநாளே புதுப்பெண் தற்கொலை..!விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்..!

You May Like