ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு..! தண்டோரா மூலம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் திடீர் மழைக்கு ஏற்ப நீர்வரத்து அதிகரிக்கும் என்றாலும், ஜூலை மாதத்தில் தான் நீர்வரத்து அதிக அளவை எட்டும். அப்போது, நீர்வரத்து விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடியை எட்டும்போது ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரி கரையோர கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம்.

Spectacular Smoky Rocks: Tamil Nadu's Hogenakkal Falls

அதன்படி, ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடியை தாண்டியுள்ளது. இதையடுத்து, வருவாய்த்துறை சார்பில் ஒகேனக்கல் மற்றும் அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்கள் ஆற்றோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்றும் கால் நடைகளை ஆற்றோரப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Chella

Next Post

மேலும் ஒரு மாதம்..? சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்...

Wed Jul 13 , 2022
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. 2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதே போல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. 10 மற்றும் 12 […]
மாணவர்களே மிக கவனம்..!! பணம் பறிபோகும் அபாயம்..!! இந்த இணையதளத்தில் யாரும் இதை செய்யாதீங்க..!!

You May Like