2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..! வடகொரியாவில் அடுத்தடுத்து நிகழும் மர்மம்…! அதிபரின் சகோதரர் மகனை காணவில்லை..! உச்சக்கட்ட பரபரப்பு..!

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. போபால் திரும்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்.. ம.பி அரசியல் குழப்பம் முடிவுக்கு வருமா..?

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், ஜெய்ப்பூரில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போபாலுக்கு திரும்பியுள்ளனர்.

congress bjp

ஜோதிராத்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகியதால் மத்தியப் பிரதேச அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. அவரைத் தொடர்ந்து 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு தொடர்ந்து 15 மாத கால காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 230 உறுப்பினர்கள் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் 120 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 116ஐ விட, கூடுதலாக 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

ஆனால் 22 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், சட்டப்பேரவையின் பெரும்பான்மை பலம் 104-ஆக குறைந்துவிடும். எனவே 107 எம்.எல்.ஏக்களை தன் வசம் வைத்துள்ள பாஜக எளிதில் ஆட்சியை கைப்பற்ற முடியும்.

mp mlas resignation

இதனிடையே இரு கட்சிகளும் தங்கள் கட்சியின் எம்.எல்.ஏக்களை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 94 பேர் ஜெய்ப்பூரில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் நாளை மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த, அம்மாநில அளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஜெய்ப்பூரில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போபாலுக்கு திரும்பியுள்ளனர்.

ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில், தங்கள் எம்.எல்.ஏக்களை பாஜக வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. எனினும் சிந்தியாவுடன் உள்ள 22 எம்.எல்.ஏக்களில் 19 பேர் பாஜகவில் சேர மாட்டார்கள் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

1newsnationuser1

Next Post

ஸ்பெயின் பிரதமர் மனைவிக்கு கொரோனா..!

Sun Mar 15 , 2020
ஸ்பெயின் பிரதமர் மனைவி பெட்ரோ சான்செஸ்-ன் மனைவி பெகோனா கோம்ஸ்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. சீனாவில் கொரோனாவின் பாதிப்பு ஓரளவு குறைந்த நிலையில், தற்போது, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  இது ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை ஸ்பெயினில் கொரோனா […]
202003150836539692 Spanish PMs Wife Has Tested Positive for Coronavirus PMs SECVPF

You May Like