திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.. வருண் சுழலில் மீண்டும் க்ளீன் போல்டான தோனி..!

உங்க வீட்டில் இதனை செய்தால் போதும்.. சண்டை, சச்சரவுகள் தீருவதுடன், எதிர்மறை ஆற்றலும் விலகிவிடும்..

நம் வீட்டின் நிலை வாசல்படியில் இந்த ஒரு பொருளை கட்டித் தொங்க விட்டாலே போதும். வீட்டில் சண்டை, சச்சரவு எதுவும் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும்..

வீட்டில்

இந்த பூமியில் உயர்ந்தவர் தாழ்ந்தவர், நல்லவர் கெட்டவர், என்ற பாகுபாடெல்லாம் கிடையவே கிடையாது. கலிகாலத்தில் பணம் உள்ளவர், பணம் இல்லாதவர், இந்த இரண்டை மட்டுமே வைத்து தான் மனிதர்கள் ஒருவரை வழி நடத்தி வருகின்றார்கள். ‘நீ பணம் உள்ளவனா, உனக்கு இந்த மரியாதை. நீ பணம் இல்லாதவனா உனக்கு இவ்வளவு தான் மரியாதை.’ இன்றைய சூழ்நிலை இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனைத் தாண்டி மனிதநேயமும், அன்பும், அறமும் ஒரு சிலரிடம் இருப்பதால் தான் இன்னும் பூமியில் மழை பெய்கிறது என்று பெரியவர்கள் கூறுவார்கள்..

ஆனால் காசு, பணம் அதிகமாக இல்லை என்றாலும், நிம்மதியான வாழ்க்கை இருந்தால் போதும் என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது.. ஆனால், நம்முடைய வீட்டில் எப்போதுமே சண்டை சச்சரவு இருந்து கொண்டிருக்கின்றது என்றால், நம் வீட்டில் இருப்பவர்களுக்கே வெறுப்பு வந்துவிடும். எதற்காகத் தான் இந்த வீட்டில் வாழ்கின்றோமோ, என்று எண்ணம் தோன்ற ஆரம்பிக்கும். வெளியே சென்ற கணவர், ‘இப்போது வீடு திரும்ப வேண்டுமா என்று யோசிப்பார்’ எப்படியும் வீட்டிற்குச் சென்றால் சண்டைதான் வரும் என்ற எண்ணத்தோடு வீட்டிற்குள் நுழைவார்.

quarrel husband wovow org 01

தினசரி உங்கள் வீட்டில் பொழுது விடியும்போது சண்டை தொடங்கி விடுமா? பொழுது சாய்ந்து தூங்க செல்லும்வரை சண்டை ஓயவே ஓயாது? இப்படி இருக்கும் பட்சத்தில் மனிதர்களாலே அந்த வீட்டில் வாசம் செய்ய முடியாது. அப்படி இருக்க மகாலட்சுமியும் நிம்மதியும், சண்டை சச்சரவு உள்ள வீட்டில் எப்படி குடி கொள்ளும். வீட்டில் சண்டை சச்சரவுகள் தீரவும், மகாலக்‌ஷ்மி நம் வீட்டிற்கு ஒரு எளிய பரிகாரம் இருக்கிறது..

ஆம்.. ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு சிறிய படிகார கல், ஒரு சிறிய துண்டு வெட்டிவேர், நவதானியம் ஒரு கை பிடி அளவு, இந்த மூன்று பொருள்களையும் மஞ்சள் துணியில் ஒன்றாக வைத்து கட்டி, நில வாசப்படியில் தொங்கவிடுங்கள்.

இன்றே கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். வாரம் ஒருமுறை வியாழக்கிழமை அன்று, இந்த பொருட்களை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, அந்த மஞ்சள் துணியை துவைத்து உலர வைத்து, மீண்டும் இந்த மூன்று பொருட்களை புதியதாக வைத்து நில வாசப்படியில் கட்டி தொங்க விடலாம்.. நிச்சயம் உங்கள் வீட்டில் நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கைதான் இருக்கும்.

manjal mudichu 251x300 1

மேலும் உங்கள் வீட்டில் கட்டாயம் உருளி (அகலமான பாத்திரம்) வையுங்கள். சிறிய அளவிலான உருளியில், உதிரி மலர்களுடன், ஒரு சிறிய துண்டு வெட்டிவேரையும், நவதானியம் ஒரு கைப்பிடி அளவு, போட்டு, வரவேற்பறையில், கன்னி மூலையில் வைத்துவிட்டால், உங்கள் வீட்டிற்குள் நுழையும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களின் ஆற்றல் உங்களை பாதிக்காமல் இருக்கும். உங்கள் வீட்டிலும் சந்தோஷம், நிம்மதி நிலை குலையாமல் இருக்கும்.

9f9276c0173713c6f2de038571523abb

தொடர்ந்து சண்டை உள்ள வீட்டில் சாம்பிராணி தூபம் வாரத்திற்கு இருமுறை கட்டாயம் போட வேண்டும். அந்த சாம்பிராணி தூபத்தில், வில்வ இலை பொடி அல்லது துளசி இலை பொடியை சேர்த்து தூபத்தை போடுங்கள்.

download 31

எதிர்மறை ஆற்றல் கண்ணுக்கு தெரியாமல், காணாமல் போய்விடும். இந்த இரண்டு பொடிகளும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சண்டை சச்சரவுகள் இல்லாத வீட்டில், காசு இல்லாத சூழ்நிலை இருந்தால், நிம்மதியான சூழல் நிலவும் பட்சத்தில், அந்த மகாலட்சுமி தானாக மனநிறைவோடு, நிரந்தரமாக வந்து அமர்ந்து விடுவாள்.

1newsnationuser1

Next Post

அவங்ககிட்ட இருந்து பாடம் கத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்ல.. ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா..

Sat Sep 26 , 2020
ஐ.நாவின் 45-வது மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், மத மற்றும் இன சிறுபான்மையினருக்கு பாதுகாப்பை வழங்குவதில் பாகிஸ்தானின் மோசமான நிலை குறித்து இந்தியா விமர்சித்தது. ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வு ஜெனீவாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு இந்தியாவின் நிரந்தர மிஷனின் முதல் செயலாளர் செந்தில்குமார் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதத்தின் மையம்” என்று அழைக்கப்படும் ஒரு நாட்டிலிருந்து மனித உரிமைகள் குறித்த படிப்பினைகள் உலகிற்கு […]
இந்தியா

You May Like