அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை #Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு.. தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..?

பிகிலுக்கு ரூ.50 கோடி.. மாஸ்டருக்கு ரூ.80 கோடி.. விஜய் கரெக்டா தான் வரி கட்டிருக்காரு.. வருமான வரித்துறை தகவல்..

பிகல் படத்திற்கு ரூ. 50 கோடியும், மாஸ்டர் படத்திற்கு ரூ. 80 கோடி சம்பளம் பெற்றுள்ள நடிகர் விஜய், முறையாக வருமான வரி செலுத்தியுள்ளார் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

vijay

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இன்று மாலை வரை நடைபெற்ற இந்த சோதனை தற்போது முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, விஜய் முறையாக வருமான வரி செலுத்தி உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிகில் படத்திற்கு ரூ. 50 கோடியும், மாஸ்டர் படத்திற்காக ரூ. 80 கோடியும் விஜய் சம்பளமாக பெற்றுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். எனினும் அவர் பெற்ற சம்பத்திற்கு முறையாக வருமான வரி செலுத்தியுள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

vijay new

2015-ம் ஆண்டு நடைபெற்ற வருமான வரி சோதனைக்கு பிறகு, விஜய் முறையாக வருமான வரி செலுத்துவதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும், கடந்த மாதம் நடைபெற்ற சோதனையில் வைக்கப்பட்ட சீல்களை அகற்றிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, 2 நாட்களுக்கு முன்பு, மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில், இன்று விஜய் வீட்டில் சோதனை நடைபெற்றது.

முன்னதாக, சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீடு, நீலாங்கரையில் உள்ள விஜய் வீடு ஆகிய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. மேலும் கடந்த மாதம் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னை அழைத்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அவரிடம் 35 மணி நேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

‘கோப்ரா’வையும் விட்டு வைக்காத கொரோனா.. படப்பிடிப்பை பாதியிலேயே முடித்து நாடு திரும்பும் படக்குழு..

Thu Mar 12 , 2020
கொரோனா வைரஸ் காரணமாக ரஷ்யாவில் நடைபெற்ற கோப்ரா படத்தின் படப்பிடிப்பை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்புவதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் தற்போது, கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கீரின் ஸ்டூடியோ மற்றும் Viacom 18 ஸ்டூடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. […]
cobra 2

You May Like