ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…! அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது…! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்…! உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்! "என்ன விலை..? ரூம் போடவா..?" ஆபாச அழைப்புகளால் அதிர்ந்த பெண்…! பழிவாங்க இப்படியா செய்வாங்க..!

முதன்முறையாக ஒரே நாளில் 24,850 கொரோனா பாசிட்டிவ்.. உலகளவிலான பாதிப்பில் இந்தியா – ரஷ்யா இடையே கடும் போட்டி..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,850 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 6.7 லட்சமாக உயர்ந்துள்ளது.

கொரோனா

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து 9-வது நாளாக இன்றும் 18,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,850 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 6,73,165-ஆக உயர்ந்துள்ளது. இதனால், உலகளவில் கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தை இந்தியா நெருங்கியுள்ளது.

திருச்சியில்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 613 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 19,268-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 2,44,814 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 4,09,082 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை அங்கு 2,00,064 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,671 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07,001 பாதிப்புகள் உறுதியானதால், இந்த பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. 97,200 பாதிப்புகள் உறுதியானதால், டெல்லி கொரோனா பாதித்த மாநிலங்களில் 3-வது இடத்தில் உள்ளது.

1newsnationuser1

Next Post

‘ஒருநாள் முழு ஊரடங்கு..’ தமிழகத்தில் கொரோனா பாதிப்பை குறைக்க அரசுக்கு கை கொடுக்குமா..?

Sun Jul 5 , 2020
இன்று முழு ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுவரை ஓரளவு கட்டுக்குள் இருந்த நோய்த்தொற்று, அன்லாக் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு தளர்வுகள் காரணமாக வேகமாக அதிகரித்தது. எனினும் தற்போது தளர்வுகளுடன் கூடிய 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகத்தில் ஜூலை […]
முழு ஊரடங்கு

You May Like