பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் கவனத்திற்கு…! இன்றே கடைசிநாள்..!

10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 4) கடைசி நாள் ஆகும். இன்று விண்ணப்பிக்காதவர்கள், நாளை (ஜூலை 5) முதல் 7ஆம் தேதி வரை கூடுதல் கட்டணம் செலுத்தி, தட்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப எண்ணை பாதுகாப்பாக வைத்திருந்து, அதை வைத்து ஹால்டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் கவனத்திற்கு...! இன்றே கடைசிநாள்..!

புதிதாக தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களும், அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கும், 12ஆம் வகுப்புக்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். துணைத் தேர்வு அட்டவணை மற்றும் விதிமுறைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Chella

Next Post

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக விசாரிப்பு..! உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Mon Jul 4 , 2022
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை புதன்கிழமை அன்று அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், […]

You May Like