வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.? இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!!! டிக் டாக் ஜி.பி.முத்துவின் "ஜி.பி.எஃப் அத்தியாயம்1" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்..!! #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் ? குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா? – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் ! காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் ! சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு அதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்.. ஐஸ் கிரீம் வழியா கொரோனா பரவுது! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு… ஆர்டிஐ மூலம் வெளிவந்த உண்மை…

கீரப்பாளையம் ஒன்றியம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிக வாக்கு பெற்ற திமுக வேட்பாளர் தோல்வியடைந்ததாக கூறி அமமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்த்தத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

dmk1

தமிழகத்தில் கடந்த 2019 டிசம்பர் 27ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் ஒன்றாக கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியத்திற்கும் மூன்றாவது வார்ட் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் சிதம்பரம் தாலுகா மதுராந்தகன் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அமுதராணி தனசேகரன் அவர்கள் திமுக சார்பாக போட்டியிட்டுள்ளார். இவர் திமுகவில் மாவட்ட மகளிரணி அமைப்பாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமாக பதவியில் உள்ளார். ஏற்கனவே கீரப்பாளையம் முன்னாள் சேர்மனுமாக இருந்துள்ளார்.

இவருக்கு போட்டியாக அமமுக சார்பில் கவிதா என்பவர் போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில் ஜனவரி மாதம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அமமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் சந்தேகம் ஏற்பட்டதால் அமுதராணி தேர்தல் அதிகாரி ஜெயகுமாரிடம் முறையிட்டுள்ளார். இருப்பினும் அப்போது அவர் பேச்சு நிராகரிக்கப்பட்டுள்ளது.

rti e2 0

இதனால் சக போட்டியாளரான காஞ்சனா சந்தோஷ்குமார் சந்தேகம் ஏற்ப்பட்டதால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வாக்கு விவரங்கள் பற்றி விவரங்களை தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். வந்த விவரங்கள் அதிர்ச்சி அளித்துள்ளது. அமுதராணி 1172 வாக்குகளும், கவிதா 1066 வாக்குகளும் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வெற்றி பெற்ற கவிதாவை விட அமுதராணி 106 வாக்குகள் அதிகம் சேகரித்துள்ளார். இந்த முறைகேடு தான் பெண் என்ற காழ்ப்புணர்ச்சியால் நடந்த்தப்படுள்ளதாக அமுதராணி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அமுதராணி திமுக மாவட்ட செயலாளர் எம்ஆர்கே பன்னீர் செல்வத்திடமும் கட்சி தலைமையிடத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளதாக அமுதராணி கூறியுள்ளார். மேலும் கட்சியின் வழிகாட்டுதலின் படி சட்டபூர்வமாக போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை ஜூன் 12ம் தேதி மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகாராக அளிக்கப்பட்டுள்ளது. இதன்மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் மோசடி செய்தவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் மாற்றி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

பைசா கணக்கில் அதிகமானால் விலையேற்றம் இல்லையா????

Sat Jun 27 , 2020
நாளுக்கு நாள் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியபடி இருக்கிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி (27.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.59 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.61 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக பொருளாதரத்தில் பெரும் பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. மார்ச் மாதம் போடப்பட்ட இந்த ஊரடங்கு கட்டப்பட்டு, தளர்வு என சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. […]
6 IT 1523966034555

You May Like