உங்கள் பிஎஃப் கணக்கின் UAN நம்பரை மறந்துவிட்டீர்களா..? இனி வீட்டிலிருந்தே மீட்டுக் கொள்ளலாம்..!!

இன்றைய காலகட்டத்தில் எம்ப்ளாயிகள் பல்வேறு புதிய வாய்ப்புகளை தேடி, தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகளுக்கு மாற்றம் செய்கின்றனர். அவர்களின் இந்த பயணத்தின் பொழுது, அவர்களது பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதில் எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம் (Employees’ Provident Fund Organisation – EPFO) முக்கிய பங்கு வகிக்கிறது. EPFO சிஸ்டத்தின் ஒரு முக்கியமான அம்சமாக யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் அமைகிறது (UAN).

இந்த 12 இலக்க அடையாள எண்ணானது ஒருவர் எத்தனை வேலை மாற்றங்கள் செய்தாலும் நிரந்தரமாக மாறாமல் இருக்கக்கூடியது. ஆதாரை போலவே UAN என்பது PF தொடர்பான செயல்பாடுகளுக்கு அத்தியாவசியமானது. இதனால், எம்ப்ளாயிகள் அவர்களது UAN எண்களை தொடர்ந்து கண்காணித்து கொண்டே வரவேண்டும். எனினும், வேலை மாற்றங்களுக்கு இடையே எம்ப்ளாயிகள் அவர்களது UAN எண்களை அவ்வப்போது மறந்துவிடுகின்றனர். எனினும் நல்ல செய்தி என்னவென்றால், EPFO-இன் ஆன்லைன் சேவைகள் மூலமாக நீங்கள் வீட்டிலிருந்தபடியே உங்களது UAN எண்ணை மீட்டெடுத்துக் கொள்ளலாம்.

UAN எண்ணை மீட்டெடுப்பது எப்படி..?

* அதிகாரப்பூர்வ https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையத்திற்கு செல்லவும்.

* சர்வீசஸ் என்ற பிரிவின் கீழ் உள்ள “For Employees” என்ற ஆப்ஷனுக்கு சென்று “Member UAN/Online Service (OCS/OTCP)” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

* திரையிடப்படும் புதிய பக்கத்தில் வலது புறத்தில் உள்ள முக்கியமான லிங்குகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள “Know your UAN” என்பதை கிளிக் செய்யவும்.

* உங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் மற்றும் கேப்சாவை உள்ளீடு செய்து, பின்னர் ஓடிபி கொடுக்க வேண்டும்.

* புதிய பக்கத்தில் உங்களது பெயர், பிறந்த தேதி, மெம்பர் ID, ஆதார் அல்லது PAN நம்பர் மற்றும் கேப்சாவை என்ட்ரி செய்து “Show My UAN” என்பதை கிளிக் செய்யுங்கள்.

* உங்களது UAN நம்பர் உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

Chella

Next Post

கொடுமையின் உச்சம்.." 12 வருடமாக வீட்டுக்குள் சிறை.! 3 பூட்டுகள், கழிவறைக்கு ஒரு சிறு பெட்டி.! ஷாக்கிங் செய்தி.!

Sat Feb 3 , 2024
கர்நாடகாவில், 12 வருடங்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட மனைவி போலீசாரால் மீட்கப்பட்டார். கழிவறை தேவைகளுக்காக ஒரு சிறிய பெட்டியை பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கணவர் மீது வழக்கு தொடுக்க அந்த மனைவி மறுத்துவிட்டார். இது குறித்து போலீசார் கணவன் மனைவி இருவருக்கும் ஆலோசனை வழங்கினார். கர்நாடக மாநிலம் மைசூரில், 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை அவரது கணவர் 12 வருடங்களாக வீட்டில் வைத்து பூட்டி உள்ளார். கழிவறை […]

You May Like