தேமுதிகவின் முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்.

மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரராஜன் இன்று காலமானார். தேமுதிகவில் எம்எல்ஏ-வாக இருந்து அவர் பின்னாளில் அதிமுகவில் இணைந்து பணியாற்றினார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜன் இன்று திடீரென உடல்நலக்குறைவால் சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார்.
தேமுதிக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்த சுந்தரராஜன் தேமுதிகவின் பொருளாளராக இருந்தவர் ஆவார். 2011-ல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ. ஆக தேர்வானார்.
சில ஆண்டுகளில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ. ஆக மாறி அக்கட்சியில் இணைந்தார். 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்க, சீட் கிடைக்கவில்லை.
இதையடுத்து, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், விஜயகாந்தை சந்திக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் இன்று அவர் காலமானார். இதையடுத்து அரசியல் பிரமுகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.