திமுக முன்னாள் அமைச்சர் உடல்நலக்குறைவால் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..

திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 83.

தஞ்சை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 4 முறை பதவி வகித்தவர் உபயதுல்லா.. 1989, 1996, 2001,2006 ஆகிய தேர்தல்களில் வெற்று பெற்று எம்.எல்.ஏவாக இருந்தார்.. மேலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவையில் வணிகத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.. திமுகவின் வர்த்தக அணி தலைவராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உபயதுல்லா பதவி வகித்து வந்தார்.. திமுக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், மு.க ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்தவர்..

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக, உபயதுல்லாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.. தஞ்சையில் உள்ள தனது வீட்டிலிருந்து மருந்துவனைக்கு கொண்டு சென்ற நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அவரின் உயிர் பிரிந்தது.. உபயதுல்லாவின் மறைவுக்கு திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

Maha

Next Post

மோசமான வானிலை….! ஜனாதிபதியின் குன்னூர் பயணம் திடீர் ரத்து…!

Sun Feb 19 , 2023
குடியரசு தலைவர் துரோபதி மருமம் 2 நாள் பயணமாக, நேற்று டெல்லியில் இருந்து தனி விமானத்தின் மூலமாக காலை 11 40 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்து சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து அதன் பிறகு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு அங்கு சென்று சிவராத்திரி விழாவில் பங்கேற்றுக் கொண்டார். ஆகவே […]

You May Like