ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு… மருத்துவமனையில் அனுமதி…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று மேற்கு ஜப்பானில் உள்ள நாராவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகமான NHK தெரிவித்துள்ளது. பிரச்சாரத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.. இதனால் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷின்சோ அபே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..

இதையடுத்து சம்பவ இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அபேயின் உரையின் போது தொடர்ச்சியாக இரண்டு சத்தம் கேட்டதாக சம்பவ இடத்தில் இருந்த செய்தியாளர் தெரிவித்தார்.. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Maha

Next Post

TVS நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்...! MBA முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

Fri Jul 8 , 2022
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planner – D&AI Planning & Integration பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி  மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் MBA  முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு […]

You May Like