பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப் காலமானார்.. அரிய வகை நோயுடன் போராடி வந்த நிலையில் மரணம்..

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப் இன்று காலமானார்.. அவருக்கு வயது 79

துபாயில் உள்ள மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த முஷரஃப் சிகிச்சை பலனின்றி இன்று மறைந்தார்.. தேசப்பிரிவினைக்கு முன்பிருந்த இந்தியாவின் டெல்லியில் 1943-ம் ஆண்டு பர்வேஸ் முஷாரஃப் பிறந்தார்.. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, பர்வேஸ் முஷரஃப் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்தது…

பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஷாரஃப் ராணுவ புரட்சி மூலம் அரசை கவிழ்த்து அதிபரானார்.. 1999-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் நவாஸ் ஷெரிப்பின் ஆட்சியை கலைத்து அந்நாட்டு அதிபராக பதவியேற்றார்.. 2001 – 2008 வரை பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்தார்.. அவர் அதிபராக இருந்த போது இந்தியாவின் கார்கிலில் பயங்கரவாதிகள் ஊடுருவல் நடைபெற்றது..

எனினும் 2007ல் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான அவசரநிலையை அமல்படுத்தியதற்காக அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.. பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு மற்றும் ரெட் மசூதி மதகுரு கொலை வழக்கில் தப்பியோடியவராக முஷரஃப் அறிவிக்கப்பட்டார்.

அரியவகை வயிற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் துபாயில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2016 முதல் சிகிச்சை பெற்று வந்தார்.. அவர் உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த சில வாரங்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.. எனினும் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..

Maha

Next Post

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு... விரைவில் வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு...

Sun Feb 5 , 2023
65 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் சுமார் 48 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் ஒரு நற்செய்தி வெளியாக உள்ளது… ஆம்.. அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் குறித்து மார்ச் முதல் வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. ஆனால், டிசம்பரில் தொழிலாளர் அமைச்சகம் வழங்கிய ஏஐசிபிஐ குறியீட்டுத் தரவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.. இதனால் அகவிலைப்படி உயர்வு எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! சம்பள உயர்வு குறித்து வெளியான ஹேப்பி நியூஸ்..!!

You May Like