’300 யூனிட் வரை இலவச மின்சாரம்’..! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் முதல்வர்..!

ஒவ்வொரு மாதமும் வீடுகளுக்கு 300 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் கிடையாது என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. அங்கு தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. அதன்படி, சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக பிரபல நடிகரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான பகவந்த் மன் பொறுப்பேற்றார். ஆட்சி அமைந்த பிறகு ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் நடவடிக்கைகளில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.

23,977 Electricity Substation Stock Photos, Pictures & Royalty-Free Images  - iStock

இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் இன்று (ஜூலை 1) முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பஞ்சாப் அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ’முந்தைய அரசாங்கங்கள் தேர்தல்களின் போது வாக்குறுதிகளை அளித்தன. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் நேரத்தில் 5 ஆண்டுகள் கடந்துவிடும். ஆனால், எங்கள் அரசாங்கம் பஞ்சாபின் வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியை அமைத்துள்ளது. இன்று பஞ்சாப் மக்களுக்கு அளிக்கப்பட்ட மற்றொரு உத்தரவாதத்தை நிறைவேற்றப்போகிறோம். இன்று முதல் பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு..! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு.!.!

Fri Jul 1 , 2022
தமிழகத்தில் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகலில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த கலந்தாய்வு நடத்தப்படாமல் இருந்தது. நடப்பாண்டு கலந்தாய்வை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் […]

You May Like