விலையில்லா பாடப்புத்தகம்..! அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை..!

விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் பல இடங்களில் சரிவர வழங்கப்படவில்லை என்ற புகாரை அடுத்து, புத்தக விநியோகம் குறித்து வரும் 15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தவுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் பல இடங்களில் சரிவர வழங்கப்படவில்லை என புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், இயக்குநர்கள் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

விலையில்லா பாடப்புத்தகம்..! அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை..!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதை உறுதி செய்தல், விலையில்லா சீருடை விநியோகம், எண்ணும் எழுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கான அங்கீகாரம், கட்டட இடிப்பு, துணைத் தேர்வு, சிறப்பு ஊக்கத்தொகை, இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்டவை குறித்தும் வரும் 15ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

நெல்லை மாவட்டத்தில் 55 கல்குவாரிகளில் 54இல் விதிமீறல்..! குவாரிகளை மூட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்..!

Sat Jul 9 , 2022
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 54 கல்குவாரிகளில் விதிமீறல்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள 55 குவாரிகளையும் முழுமையாக ஆய்வு செய்து விதிமீறல்களை கண்டறியுமாறு ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, குவாரிகளை ஆய்வு செய்து அதன் அறிக்கையை ஆட்சியரிடம் சமர்பித்தது. அதில், மாவட்டத்தில் மொத்தம் உள்ள […]
நெல்லை மாவட்டத்தில் 55 கல்குவாரிகளில் 54இல் விதிமீறல்..! குவாரிகளை மூட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்..!

You May Like