இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

சாத்தான்குளம் கொலை எதிரொலி.. தமிழகம் முழுவதும் ‘ஃப்ரன்ட்ஸ் ஆஃப் போலீஸ்’குழுவை பயன்படுத்த இடைக்கால தடை..

தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம்

காவலர்களுக்கு உதவும் வகையில், ‘ஃப்ரண்டஸ் ஆஃப் போலீஸ்’ எனப்படும் போலீஸ் நண்பர்கள் குழு பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த வகையில் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரத்தில் இந்த ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்த சிலர் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து நேற்று தன்னார்வலர்கள் சிலரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த 6 பேரிடம் நேற்று மாலை முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பொலீஸ் நண்பர்களை தற்காலிகமாக பயன்படுத்த வேண்டாம் என்று தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பப்பட்ட உத்தரவில், தற்போதைக்கு ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தன்னார்வலர்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்நிலைய பணி, ரோந்து மற்றும் வாகன சோதனையில் போலீஸ் நண்பர்களை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுளது. இன்னும் ஓரிரு தினங்களில் இதுகுறித்த நிரந்தர முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

fop

போலீஸ் நண்பர்களுக்கு அரசு சார்பில் எந்த அரசாணையும் வழங்கப்படாத நிலையில், அந்தந்த காவல்நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் போலீஸ் நண்பர்களை பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

முதன்முறையாக ஒரே நாளில் 24,850 கொரோனா பாசிட்டிவ்.. உலகளவிலான பாதிப்பில் இந்தியா - ரஷ்யா இடையே கடும் போட்டி..

Sun Jul 5 , 2020
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,850 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 6.7 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து 9-வது நாளாக இன்றும் 18,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய சுகாதார […]
கொரோனா

You May Like