இன்ஸ்டாகிராமில் நட்பு, சினிமா மோகம்…கணவரின் பேச்சை கேட்காததால் கொலை !

இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகி வந்த நிலையில் இதை பிடிக்காத கணவர் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த சித்ரா (35). இவர் கணவர் அமிர்தலிங்கம். சித்ரா இன்ஸ்டாகிராமில் எப்போது ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி வீடியோ போடவது, புகைப்படம் அப்லோடு செய்வது என்று பிசியாக இருந்துவந்தார். அப்படியே இவரது ரசிர்களுடன் சாட் செய்வது என பொழுதை கழித்துள்ளார். அப்போதுதான் இன்ஸ்டா நண்பர் ஒருவர் பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். இந்த வாய்ப்பை விடக்கூடாது என அறிந்த சித்ரா கணவரிடம் நண்பர்களை சந்திப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர்தான் அமிர்தலிங்கத்திற்கு தெரிந்தது, சித்ரா சந்திக்க சென்றது ஆண் நண்பர்களை என்று… இது பிடிக்காததால் இதை வைத்தே அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றும் இதே போல சண்டை வந்துள்ளது. சண்டை முற்றியதில் ஆத்திரத்தில் அமிர்தலிங்கம் மனைவியின் கழுத்தை விடாப்பிடியாக பிடித்து நெருக்கினார். இதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது டிக்டாக் வீடியோவிலேயே எந்நேரமும் நேரத்தை வீணடித்ததாக கணவர் தெரிவித்தார். முதலில் பொறுப்பாக குடும்பத்தை கவனித்து வந்த சித்ரா, டிக்டாக்கில் பிசியானார். டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர் இன்ஸ்டாகிராமில் மூழ்கிவிட்டார். கூலி வேலைக்கு சென்று வந்த சித்ரா அந்த வேலைக்கு செல்லாமல் இன்ஸ்டாவில் நேரத்தை கழித்து சில நட்பு வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார். சினிமா வாய்ப்பு தேடி நண்பர்களுடன் சென்னையில் தங்கி இருந்ததாகவும் பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் கணவரிடமே திரும்பினார். இந்த நேரத்தில்தான் மீண்டும் சண்டை ஆரம்பித்துள்ளது. இதனால் ஒரு உயிரும் போனது.

இந்த வழக்கில் அமிர்தலிங்கத்தை கைது செய்துள்ளனர். இது போல இன்ஸ்டா, டிக்டாக் என பெண்கள் தங்கள் வாழ்க்கையை விட்டு வேறு பாதையில் செல்வதால் குடும்பமே நிலைகுலைந்து போகின்றது.

Next Post

கல்லூரி மாணவர் தற்கொலையில் கடிதம் சிக்கியது!

Mon Nov 7 , 2022
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூருியில் 2-ம் ஆண்டு மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த மாணவர் தற்கொலையில் முக்கியமான கடிதம் சிக்கியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் மாவட்டத்தில் முத்துநாயக்கன்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கண்ணன்-பிரேமலதா தம்பதி. இவர்களுக்கு இளம்பரிதி(18) என்ற மகன் உள்ளார். இவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இவர் முதலாம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில்தோல்வி அடைந்தார். நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். […]

You May Like