நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

நடிகர் விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜய் பிறந்தநாள் காமன் டிவி, பிறந்த நாள் போஸ்டர் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் விஜய் பிறந்தநாளை திருவிழா போல விஜய் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் இம்முறை கொரோனா பெருந்தொற்று காரணமாக, தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் எனவும், வீட்டிலேயே இருக்கும் படியும் தனது ரசிகர்மன்றங்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் பல திரைப்பிரபலங்களும் விஜய் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஆர்யா, சிவகார்த்திகேயன், அட்லி, ராகவா லாரன்ஸ், என பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் #HappyBirthdayThalapathyVijay என்ற ஹேஷ்டாக் இன்று காலை முதலே ட்ரெண்டிங்கில் உள்ளது.
நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பதிவில் “ பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா.. இந்த ஆண்டு அருமையான ஆண்டாக அமையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் “ என்னோட அண்ணா, என்னோட தளபதி.. என்னை விட அவரை மிகவும் விரும்புகிறேன்.. மதிக்கிறேன்.. அவருக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன்.. நீங்கள் இல்லாமல், நான் ஒன்றுமே இல்லை.. பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“அன்புள்ள தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் “பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா” என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர்பதிவில் “ மாஸ்டர் படம் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கியுள்ளது. என்னால் ஒரு தனிப்பட்ட நாளை தேர்வு செய்ய முடியாது. உங்களுடன் இருந்த ஒவ்வொரு கணமும் என்றென்றும் நினைவில் இருக்கும்.. இதை செய்ததற்கு நன்றி.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ், விஷ்ணுவிஷால், இயக்குனர் மோகன் ராஜா, காஜல் அகர்வால், வரலக்ஷ்மி சரத்குமார் என பலப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.