சீனாவில் மற்றொரு பேராபாத்து.. 10 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம்.. உரிமையாளருடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் எருமை மாடு.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வீடியோ.. “ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க..

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலாகிறது- ஆட்சியர் வினய் உத்தரவு

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் 7 நாட்களுக்கு  முழு  ஊரடங்கு அமலாகிறது- ஆட்சியர் வினய் உத்தரவு

மதுரை: கொரோனா பாதிப்பு அதிகரிப்பின் காரணமாக நாளை முதல் ஜூன் 30 வரை மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார்.


மதுரையில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் கொரோனா தொற்று உறுதியாகிவருகிறது. இந்நிலையில் தான் மதுரை மார்க்கெட் பகுதி மூடல், மக்களை கண்காணிக்க 10 பறக்கும் படைகள் அமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் மேற்கொண்டுவந்தார்.

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் 7 நாட்களுக்கு  முழு  ஊரடங்கு அமலாகிறது- ஆட்சியர் வினய் உத்தரவு

இந்நிலையில் தான் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு கட்டாயமாக்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பில் இருந்தும் கருத்துகள் வெளியாகி வந்தன. மேலும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் மதுரையினை காக்க ஊரடங்கு அவசியம் என வலியுறுத்திவந்தனர்.

இதன் காரணமாக தற்போது மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளாக பரவை, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் ஜூன் 30 வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார். இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் தேநீர் கடைகள் உள்ளிட்ட எந்த கடைகளும் இயங்காது எனவும், அத்தியாவசிய மற்றும் மருத்துவ தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியே வரலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் எனவும் சமூக இடைவெளியினை முறையாக பின்பற்ற வேண்டும் என்ற அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் 7 நாட்களுக்கு  முழு  ஊரடங்கு அமலாகிறது- ஆட்சியர் வினய் உத்தரவு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அடுத்தாற்போல் தற்போது மதுரை மாவட்டத்திலும் பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கும் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

1newsnationuser2

Next Post

உணவை வேகமாக உண்பதால் ஏற்படும் பிரச்சனைகள் எத்தனை தெரியுமா?...

Mon Jun 22 , 2020
நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது உணவு என்பதால் தான், மருத்துவர்கள் எப்போதும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் மட்டும் போதுமா என்றால், கண்டிப்பாக கிடையாது நாம் உண்ணும் உணவை சரியாக சாப்பிடுவதும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். இன்றைய அவசர உலகத்தில் யாருக்கும் அமைதியாக நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடக் கூட நேரம் இல்லை. கைக்கு கிடைத்ததை வாய்க்கு போட்டு விட்டு […]
images 74

You May Like