உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..!

தமிழகத்தில் மேலும் 10 மாவட்டங்களில் முழு ஊரடங்கு..? மருத்துவக் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

10 மாவட்டங்களில்

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து இன்று முதல்வர் பழனிசாமி மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

Edappadi

கொரோனா தொடர்பாக மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்துவது இது 7-வது முறையாகும். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், ஐசிஎம்ஆர் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 15 நாட்களில் தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்தும், 6-வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும் இதுகுறித்த அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1newsnationuser1

Next Post

“லாக்டவுனை நீட்டிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கவில்லை..” மருத்துவ நிபுணர்கள் பேட்டி..

Mon Jun 29 , 2020
தமிழகத்தில் லாக்டவுனை நீட்டிக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பிறகு மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய ஐசிஎம்ஆர் மருத்துவ நிபுணர் பிரதீபா கவுர் “ தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரித்துள்ளது. திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையை போன்றே மற்ற […]
லாக்டவுனை

You May Like