மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்பபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. கடந்த 4 நாட்களாகவே, 2,000-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டு வந்த நிலையில், இதுவரை இல்லாத புதிய உச்சமாக, ஒரே நாளில் 2,500 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60,000-ஐ நெருங்கியுள்ளது. இதுவரை மொத்தம் 757 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் சுமார் 41,000 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வருவதால், இந்த 4 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையை தவிரத்த மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் மதுரை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை அமல்ப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் 30-ம் தேதி வரை இந்த 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.