தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா….? மறைக்கப்படும் அறிவியல்..! "ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"..! கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா..! விடுதலையில் அரசியல் விளையாட்டு..! இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு..! 2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..?

“கொரோனா, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி.. 3 மிகப்பெரிய தோல்விகள்..” வீடியோ மூலம் மோடியை கலாய்த்த ராகுல்காந்தி..

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றுடன் கொரோனாவும் மோடி அரசின் தோல்விகளில் வருங்காலத்தில் இணையக்கூடும் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ ஹாவர்டு பிசினஸ் ஸ்கூலின் தோல்விகள் குறித்த வருங்கால ஆய்வுகள்.. 1. கோவிட் 19, 2. பண மதிப்பிழப்பு. .3. ஜிஎஸ்டி வரிவிதிப்பு.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஜனதா ஊரடங்கு குறித்து மோடி பேசியதும், கொரோனாவிற்கு எதிராக போரிடும் மருத்துவகள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு நன்றி செலுத்து வகையில், பொதுமக்கள் கைதட்ட வேண்டும், மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும் என்று மோடி கூறியதும் இடம்பெற்றுள்ளன. மகாபாரத போரில் 18 நாட்களில் வெற்றி கிடைத்தது போல, கொரோனாவிற்கு எதிரான போரில், 21 நாட்களில் வெற்றி கிடைக்கும் என்று மோடி பேசியதும் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் மோடி பேசியதுடன், இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்ந்த விவரத்தையும் இணைத்து ராகுல் வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா பரவத் தொடங்கிய முதல் நாளில், இந்தியா உலகளவில் 48-வது இடத்தில் இருந்ததும், 103-வது நாளில் உலகளவிலான கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறிய விவரங்களும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் மொத்த பாதிப்பு 7 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் உலகளவிலான கொரோனா பாதிப்பில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

kerala coronann

இதன் காரணமாக அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. அதாவது 29 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 16 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளுடன் பிரேசில் 2வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

மகன் மரணம்: மருமகளை திருமணம் செய்த மாமனார்

Mon Jul 6 , 2020
சத்தீஸ்கரில் கணவனை இழந்து 2 வருட தனிமையில் தவித்த மருமகள், மாமனாரையே கல்யாணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. பிலாஸ்பூரை சேர்ந்த 21 வயதான ஆர்த்தி சிங் என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், எதிர்பாராதவிதமாக கணவன் உயிரிழந்துள்ளார். இதனால் அவரது திருமண வாழ்வே நொறுங்கி போனது. பல இன்னல்களை சந்திக்க, திடீரென கணவர் இறந்துவிட்டதால், என்ன செய்வது எனத் தெரியாமல், ஆர்த்தி தவித்து தனிமையில் தவித்துள்ளார். […]
n1963119707813f5b62f089bc26f40966c1c9426ec9ce410712f1c050b887add7eaab8544b

You May Like