நாட்டின் எல்லையில் அமர்ந்திருக்கும் வீரர்கள் உணவு, குடிநீர், தனிமை, கடுமையான குளிர் போன்றவற்றில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் தொடர்ந்து நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், இரு நாடுகளும் தங்கள் படைகளை எல்லையிலிருந்து விலக்க ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு லடாக்கில் எல்லைப்பகுதியின் (எல்.எ.சி) புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிவருகின்றன. இதில் கால்வன் பள்ளத்தாக்கில் எல்.எ.சியின் இருபுறமும் சீன இராணுவம் இருப்பதைக் காணலாம். சீன வீரர்கள் மற்றும் அவற்றின் சில கட்டமைப்புகள் அந்த பகுதியில் காணப்படுகின்றன. உதாரணமாக அவர்கள் சார்பாக சில கட்டுமான பணிகள் செய்யப்பட்டுள்ளது அந்த புகைப்படங்களில் தெரியவந்துள்ளது.
இப்போது நாம் பார்க்க இருப்பது ஒரு இராணுவ கிராமம். அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் யாரவது ஒருவர் இராணுவ மனிதராக வேலை செய்ய வேண்டும். இங்கு நாற்பது கிலோமீட்டர் தொலைவில் பாட்னா – முகால்சாராய் இணைக்கும் ஒரு இரயில் வழித்தடமும் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 12000 வீரர்கள் இந்திய இராணுவத்தில் சோல்ஜர்கள் முதல் கர்னல்கள் வரை பல்வேறு பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள், அதே நேரத்தில் 15000 க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்களும் உள்ளனர்.
பிகார் உத்தரபிரதேசத்தின் எல்லையில் அமைந்துள்ள இந்த கிராமம் கஹ்மார் என்று அழைக்கப்படுகிறது. இது சுமார் 1,200,000 மக்கள் தொகை கொண்ட கிராமமாகும். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் மற்றும் கார்கில் போர் போன்ற பல்வேறு போர்களில் இந்த கிராம மக்களின் பங்கு உள்ளது. உலகப் போரின் போது, பிரிட்டிஷ் இராணுவம் கஹ்மரின் 228 வீரர்களைக் கொண்டிருந்தது, அதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களது நினைவாக கிராமத்தில் ஒரு அழகான கல்வெட்டு உள்ளது. இந்த கிராமத்தில் முன்னாள் படைவீரர் சேவைகள் குழு என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு மக்களுக்கு இராணுவத்தில் சேர உற்சாகம் அளித்து வருகிறது.