சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

காந்தி மார்க்கெட் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்… திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் அடையாள அட்டையுடன் வரும் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும், விதிமுறையை மீறி அதிக நபர்கள் கூடியதால் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

trichy collector 2

திருச்சி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை அடுத்து வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்றைய தினம் பொதுமக்கள் அதிக அளவு வந்து சென்ற இடமான மத்திய பேருந்து நிலையம் பகுதியில் தூய்மை பணிகளை, மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆய்வு செய்தார்.

trichy gandhi market1 1

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டத்தில் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் வந்ததால் காந்தி மார்க்கெட் பகுதியில் போலீசார் கொண்டு அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். திருச்சி காந்தி மார்க்கெட்டில் அடையாள அட்டையுடன் வரும் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி, விதிமுறையை மீறி அதிக நபர்கள் கூடியதால் கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

trichy jnction 1

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் அனைத்தும் செயல்பட்டு வருகிறது என்றும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வீட்டில் இருந்தால் இந்த நோய் தாக்கத்திலிருந்து நாம் பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும், வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம். கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 7 பேர் தற்போது வீடு திரும்பியுள்ள நிலையில், மேலும் 6 பேர் மட்டுமே அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் எவருக்கேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மருத்துவ பணியாளர்கள் பணிக்கு வருவதற்கு வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று முதல் தெருவோரம் வசிப்பவர்களுக்கு மற்றும் வெளி மாநிலத்தவர்களுக்கு சமுதாயக்கூடம் மூலம் தன்னார்வலர்களை கொண்டு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் எவரேனும் காந்தி மார்க்கெட் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

1newsnationuser2

Next Post

நாம் பயந்ததை விட அதி தீவிரமாகும் கொரோனா.. இதுவரை உலகம் முழுவதும் 18,906 பேர் பலி.. ஒரே நாளில் புதிதாக 1 லட்சம் பேர் பாதிப்பு..

Wed Mar 25 , 2020
கொரோனா பெருந்தொற்று நோய் நாம் பயந்ததை விட அதிதீவிரமாகி வருவதால் இதுவரை உலகம் முழுவதும் 18,906 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் புதிதாக 1 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதியானதால், சுமார் 4.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்று நோய் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நோய் தொற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்ற தெரியாமல் வல்லரசு நாடுகள் தவித்து வரும் நிலையில், இந்த வைரஸ் […]
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை அவசர கடிதம்..! மக்களே உஷார்..!

You May Like