’இனி புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லக்‌ஷ்மி படம்’..!! முதல்வர் அதிரடி

இனி புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி, மறுபக்கம் கடவுளர் லக்‌ஷ்மி, விநாயகரின் படங்களை அச்சடிக்குமாறு பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “எத்தனை நடவடிக்கைகள், முயற்சிகள் மேற்கொண்டாலும் இறையருள் இல்லாவிட்டால் அது பலன் தராது. எனவே, பிரதமர் மோடிக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நம் ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லக்‌ஷ்மி படங்களை அச்சிட்டால் நிச்சயமாக தேசம் வளர்ச்சி காணும். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு நான் ஓரிரு தினங்களில் கடிதம் எழுதுவேன். முஸ்லிம் தேசமான இந்தோனேசியாவின் ரூபாய் நோட்டில் விநாயகர் படம் இருக்கிறது. அவர்களால் முடியுமென்றால் நம்மால் ஏன் முடியாது. ஆகையால், இனி புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி, மறுபக்கம் கடவுளர் லக்‌ஷ்மி, விநாயகரின் படங்களை அச்சடிக்கலாம். இந்தியா வளமான நாடாக இருக்கவே விரும்புகிறேன். ஒவ்வொரு இந்திய குடும்பமும் செழிப்பாக இருக்கவே விரும்புகிறோம்” என்றார்.

’இனி புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லக்‌ஷ்மி படம்’..!! முதல்வர் அதிரடி

தொடர்ந்து பேசிய அவர், ”டெல்லியில் கடந்த ஆண்டுகளைவிட தீபாவளிக்குப் பின்னர் காற்றின் தரம் ஒப்பீட்டு அளவில் மேம்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சி. இது சிறு மகிழ்ச்சிதான். டெல்லியில் சுத்தமான காற்று என்பதே நமது இலக்கு” என்றார். குஜராத் தேர்தல் பற்றி பேசிய அவர், “27 ஆண்டுகளாக பாஜக குஜராத்தில் ஆட்சியில் இருந்தும் ஏதேனும் ஒரு நல்ல செயலை செய்தததாக நிரூபிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

Chella

Next Post

திருமண ஆசை காட்டி, ஊர் ஊராக அழைத்துச் சென்று உல்லாசம்.. 15 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.!

Wed Oct 26 , 2022
சென்னையில் கும்மிடிப்பூண்டி அடுத்த பிச்சாட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 45) என்பவருக்கு திலகா (வயது 37) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து 15 வயது மகள் உஷாவுடன் திலகா நெல்வாய் கிராமத்தில் சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். உஷா, பெரியபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 10ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற […]

You May Like