அவரைக் கட்டி இழுத்து வந்து இந்த திரைப்படத்தை பார்க்க வைக்க வேண்டும்…..! அண்ணாமலை மீது பாய்ந்த காயத்ரி ரகுராம்…..!

பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் அண்ணாமலைக்கும், காயத்ரி ரகுராமுக்கும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அவர்களுக்குள் ஏற்பட்ட விரிசலால் காயத்ரி கிராமம் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகினார்.

அதன் பிறகு பாஜகவிற்கு எதிராகவும், அண்ணாமலைக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டார். மேலும் வரும் ஏப்ரல் மாதம் அவர் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டி நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் சமீபத்தில் வெளியான திரைப்பட இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் வெளியாகி இருக்கின்ற பகாசுரன் திரைப்படத்தை பார்த்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார்கள் அப்போது பகாசூரன் திரைப்படம் குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.ஒரு பெண் எப்படி சுதந்திரமாக இருக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு திரைப்படமாக இது இருக்கிறது.

ஒரு குடும்பத்தில் பெண் எப்படி இருக்க வேண்டும் ஆண்கள் எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் எப்படி வளர வேண்டும் பெண்களை தவறாக சித்தரிப்பவர்களையும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்களையும் குறித்த திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் பாரதிய ஜனதாவிலிருந்து இது போன்ற ஒரு நிலை எனக்கும் உண்டானது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அது தான் குறிப்பாக கடந்த மாதம் ஒரு பொங்கல் விழாவில் பங்கேற்றுக் கொண்ட போது கேமராவை தவறாக வைத்து எடுத்தனர் இது சாதாரண விஷயம் கிடையாது.கடலூரில் தவறாக சித்தரிக்கப்பட்டதால் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். பெண்களும், மாணவிகளும் தங்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளையும் யாராவது தவறாக நடந்து கொண்டாலே அது தொடர்பாக பெற்றோர்களிடம் தைரியமாக சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார் காயத்ரி ரகுராம்.

பெண்கள் தொடர்பாக தவறான வீடியோ எடுப்பவர்களையும் ஆடியோ செய்பவர்கள் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.எனக்கு நடந்ததை போல பல்வேறு பெண்களுக்கு நடந்திருக்கிறது என்னை போலவே மற்ற பெண்களும் தைரியமாக வெளியில் வந்து பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என கூறி இருக்கிறார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைகளை கட்டி இழுத்து வந்து இந்த திரைப்படத்தை 100 முறை பார்க்க வைக்க வேண்டும். பாஜகவில் இருந்து விலகி வெளியே வந்த பின்னர் ஏராளமான மிரட்டல்கள் எனக்கு வந்தது. என்னை பற்றிய வீடியோ உள்ளதாகவும், ஆடியோ உள்ளதாகவும் என்னுடைய புகைப்படத்தை தவறாக சித்தரித்தும் வெளியிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக காவல்துறை சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனாலும் அவர் ஒரு கட்சியின் பெரிய தலைவர் பதவியில் உள்ளதால் நடவடிக்கை மேற்கொள்வதில் எதற்காக தாமதமாகிறது என்பது இதுவரையும் தெரியவில்லை. ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பெண்களின் பாதுகாப்பிற்காக நடை பயணம் ஆரம்பிக்க இருக்கின்றது. அண்ணாமலை ஊழலை எதிர்த்து நடை பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் அவருடைய கட்சியில் இருக்கும் நபர்கள் தொடர்பான புகார் மீது எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ள அவரால் முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

சக்தி யாத்திரை என்ற பெயரில் பெண்களுக்கான நடை பயணமாக இந்த பயணம் இருக்கும். பாஜகவில் ஒரு பெண்ணை தவறாக சித்தரிப்பதையும் அங்கு இருக்கக்கூடிய பெண் நிர்வாகிகள் அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.அது ஏன் என்பது அவர்களுக்குத் தான் தெரியும் இது தொடர்பாக வானதி சீனிவாசனிடமும், குஷ்விடமும் தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.

Next Post

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் நீலகிரி பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்..?

Sun Feb 19 , 2023
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் நீலகிரி பயணம் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.. குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு திரௌபதி முர்மு முதன்முறையாக 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார்.. நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர், கோயில் வளாகத்தை சுற்றி பார்வையிட்டார்.. பின்னர் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றார்.. கோவையில் உள்ள ஈஷோ யோகா […]

You May Like