ரெடியா…? மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை பொதுத்தேர்வு…! அதற்கு முன் செய்முறை தேர்வு…! வெளியான பட்டியல்

தமிழக பள்ளிக் கல்வியில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதற்குமுன் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 12 முதல் 24-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி 12-ம் வகுப்புக்கு பிப்ரவரி 12 முதல் 17-ம் தேதி வரையும், 11-ம் வகுப்புக்கு பிப்ரவரி 19 முதல் 24-ம் தேதி வரையும் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க வேண்டும். இதையடுத்து மாணவர்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவுசெய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பிப்ரவரி 5 முதல் 17-க்குள் தேர்வுத் துறை வலைதளத்தில் (http://www.dge.tn.gov.in/) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் அதில், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மாணவர்களின் செய்முறை மதிப்பெண் விவரங்களை பூர்த்தி செய்து மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வின்போது மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். செய்முறை தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களை தான் நியமிக்க வேண்டும் என்பன உட்பட வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.

1newsnationuser2

Next Post

பற்களில் உள்ள கறை நீங்கி முத்து போல் ஜொலிக்க இதை பண்ணுங்க போதும்.!?

Thu Feb 1 , 2024
பலருக்கும் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கி ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். பற்கள் உறுதியாக இருப்பதற்கு கால்சியம் மிக முக்கியமான ஊட்டச்சத்தாக கருதப்படுகிறது. எனவே நாம் உண்ணும் உணவில் கால்சியம் சத்து நிறைந்த உணவு பொருட்களை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் அல்லது மவுத் பிரஷ்ணர் வைத்து வாய் கொப்பளித்து விட வேண்டும். காலை, இரவு […]

You May Like