விருப்பத்திற்கு மாறாக நடந்த குடும்பத்தினர்…..! விபரீத முடிவு எடுத்த பள்ளி மாணவி….!

சில பெற்றோர்கள் பிள்ளைகளை பெற்று விட்டால் அந்த பிள்ளைகள் கடைசி வரையில் நம்முடைய பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், அப்படி நினைப்பது தவறல்ல. ஒரு வயதிற்கு மேல் பிள்ளைகளுக்கும் சுய விருப்பு, வெறுப்பு இருக்கும் என்பதை தற்போதைய பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை.

ஆண் பிள்ளைகளுக்கே இப்படி என்றால் பெண் பிள்ளைகளுக்கு கேட்கவா வேண்டும்? நாம் எடுக்கும் முடிவு சரியானதாக தான் இருக்கும் என்று ஒரு சில பெற்றோர் எடுக்கும் பல அதிரடி முடிவுகளால் பெற்றோர்களை சங்கடப்படுத்தக் கூடாது என்று இன்றளவும் பெற்றோர்கள் எடுத்த முடிவால் வருத்தத்தில் வாழ்ந்து வரும் பிள்ளைகள் ஏராளம்.அதேபோல பெற்றோர்களை எதிர்த்து பேச துணிவில்லாமல் தங்களுடைய வாழ்வையே முடித்துக் கொள்ள நினைக்கும் பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில், கோயமுத்தூர் மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள கவுண்டர் மில்ஸ் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் ஸ்ரீ வர்ஷா (20) இவர் நேற்று முன்தினம் கல்லூரியில் இருக்கின்ற கழிவறையில் சாணி பவுடரை குறித்து வாந்தி எடுத்த நிலையில் கிடந்திருக்கிறார்.

இதனைக் கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி, கல்லூரி நிர்வாகத்திடம் இது தொடர்பாக தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே அந்த மாணவியை மீட்ட கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கே சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக துடியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஸ்ரீ வர்ஷாவின் விருப்பத்திற்கு எதிராக அவர்களுடைய வீட்டில் பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது.

ஆகவே மனமுடைந்து காணப்பட்ட மாணவி ஸ்ரீ வர்ஷா நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில் சாணி பவுடர் என்ற விஷத்தை அருந்தி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இந்த நிலையில், மருத்துவமனைகள் அவர் உயிரிழந்ததாகவும் துடியலூர் காவல் துறையினர் நேற்று கூறியிருக்கிறார்கள். இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

என் சாவுக்கு நானே காரணம்….! கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி….!

Thu Feb 16 , 2023
மனிதராக பிறந்த எல்லோருக்கும் நிச்சயமாக பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். அதற்காக பிரச்சனை என்று வந்துவிட்டால் உடனடியாக உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்திலும் அந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்காது.எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் நாம் தற்கொலை செய்து கொண்டால் அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வராது. அந்த பிரச்சனையை இன்று நிதானமாக எதிர்கொண்டால் மட்டுமே அந்த பிரச்சினை முடிவுக்கு வரும் அல்லது அந்த பிரச்சனையின் வீரியம் குறையும். இதை […]
’நான் ஹாஸ்டல் போக மாட்டேன்’..!! ஆத்திரத்தில் தாயின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொன்ற சிறுவன்..!!

You May Like