மக்களுக்கு எப்போதும் புதுமையான விஷயங்களை தான் மிகவும் பிடிக்கும். தற்போது உள்ள சமூக வலைதள பிரியர்களும் தங்கள் திறமைகளை புதுமையான வடிவில் தான் காட்ட முயற்சிக்கின்றனர்.

அதோடு பல ஆச்சரியப்படும் நிகழ்வுகளும் இணையத்தின் உதவியால் பல கோடி பேர்களை சென்றடைகிறது. அந்த வகையில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது LED சேலை. ஜொலிக்கும் இந்த LED சேலையை கட்டிய பெண்ணின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தொட்டால் ஷாக் அடிக்குமா எனவும் கேலி செய்து வருகின்றனர்.