பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..! "பிரிஞ்சு மூணு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள வேறு ஒருத்தியோட…" கத்தியால் குத்திய மனைவி..! மாந்திரீகவாதியை கொடூரமாக குத்தி கொலை செய்த நபர்..! பதறவைக்கும் பகீர் பின்னணி..! 'பார்லர்' CEOவிற்கு கொலை மிரட்டல்..! டிரம்ப் ஆதரவாளர்கள் அதிகம் இருப்பது தான் காரணமா..? கும்பகர்ணனை போல மாதக்கணக்கில் தூங்கும் கிராம மக்கள்.. இதுதான் காரணமாம்..!! இந்த அலாவுதீன் அற்புத விளக்கு 2 கோடியாம்..! ஆசைப்பட்டு சென்ற டாக்டருக்கு நேர்ந்த கதி..!

ஊர்ப் பெயர்களை மாற்றி வெளியிட்ட அரசாணை : திரும்பப் பெற்றது தமிழக அரசு..

ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில் ஆங்கிலத்தில் மாற்றம் செய்த அரசாணையை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊர்ப் பெயர்களை

தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் பெயர்களை, தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில் ஆங்கிலத்திலும் மாற்றி அமைத்து தமிழக அரசு கடந்த வாரம் அரசாணை வெளியிட்டது. அதன்படி, EGMORE என எழுதப்பட்டு வந்த எழும்பூர், இனி EZHUMBOOR என எழுதப்பட வேண்டும். கோயம்புத்தூரின் ஆங்கில உச்சரிப்பு இதுவரை Coimbatore ஆக இருந்தது, தற்போது Koyampuththoor என மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், Tuticorin என்று இருந்து வந்த தூத்துக்குடி, தற்போது Thooththukkudi என மாற்றப்பட்டுள்ளது. இதேபோல பல பகுதிகளின் பெயர்களும் மாற்றியமைக்கப்பட்டது.

name change

இதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், இந்த மாற்றம் தேவையற்றது என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில், ஊர்ப்பெயர்களின் மாற்றம் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்வளர்ச்சித் துறை மாஃபாய் பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு ஒலிபெயர்ப்பு தரநிலைகள் குறித்த நிபுணர்களின் கருத்துக்களை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். இதுகுறித்து புதிய அறிவிப்பு 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்படும். தமிழில் ஊர்ப் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணையை திரும்பப் பெறப்பட்டது. அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்பட்டது. புதிய அரசாணை விரைவில் வெளியிடப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

எடப்பாடி பழனிசாமி அரசு பல்டி அரசாக மாறிவிட்டது : மு.க ஸ்டாலின் விமர்சனம்

Thu Jun 18 , 2020
எடப்பாடி பழனிசாமி அரசு பல்டி அரசாக மாறிவிட்டது என்று மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள், இடங்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில் ஆங்கிலத்திலும் மாற்றி அமைத்து தமிழக அரசு கடந்த 10-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, சென்னை, கடலூர், சிவகங்கை, திருவள்ளூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய பல மாவட்டங்களைச் சேர்ந்த 1018 ஊர்களின் ஆங்கிலப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே மாற்றப்பட்டது. […]
தமிழகத்தின்

You May Like