தங்கம் விலை இன்றும் உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.37,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது….

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4,676-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.37,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது… இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. வெள்ளி விலை 60 காசு உயர்ந்து ரூ.62.30-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.62,300-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

தீவிரமடைந்த போராட்டம்.. மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல அதிபர் கோட்டபய ராஜபக்ச திட்டம்..

Thu Jul 14 , 2022
மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல அதிபர் கோட்டாபய ராஜபக்ச தயாராகி வரும் நிலையில் இலங்கையில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.. வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. எனினும் தற்போது வரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தற்போது அதிபரின் செயலகம், அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் […]

You May Like