
கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக தற்போது தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸினால் அமல்படுத்தபட்ட ஊரடங்கு காலக்கட்டத்தின் போது கூட கடைக்கே செல்லாமலே தங்க நகைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து மக்கள் வாங்கி வந்தனர். ஆனால் ஆபரண தங்கத்தின் விலை தற்போது 38 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 34 ஆயிரம் வரை இருந்த நிலையில், தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கத்தோடு தான் காணப்படுகிறது.

தற்போது சவரனிற்கு ரூ.152 உயர்ந்து, ரூ.36,408 ஆக உயர்ந்துள்ளது. இதனைப்போன்று வெள்ளி கிராமிற்கு ரூ.47.61 க்கும், 10 கிராம் 476.10 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மாறி மாறி உயர்ந்துவருவது மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.