தங்கம் விலை இன்றும் உயர்வு… எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,336க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

அந்த வகையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த முதலே தொடர்ந்து தங்கம் விலை கடுமையாக உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.4,792க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.. 38,336 விற்பனை செய்யப்படுகிறது… ஆனால் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 குறைந்து ரூ.63.50-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.63,500-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

நடுவானில் பறந்த போது கேபினில் புகை... அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம்...

Sat Jul 2 , 2022
நடுவானில் பறந்தபோது கேபினில் இருந்து புகை வந்ததால் ஜபல்பூர் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது.. இன்று காலை டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.. அப்போது 5,000 அடி உயரத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் பறந்தபோது கேபினில் புகை வந்ததை பணியாளர்கள் கண்டுபிடித்தனர்.. இதை தொடர்ந்து விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது.. பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறங்கினர்.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமான சேவை தொடர்பாளர் […]

You May Like