தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.37,408-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

அந்த வகையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த முதலே தொடர்ந்து தங்கம் விலை கடுமையாக உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் கடந்த 2 நாட்கள் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.. அதாவது கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,064 குறைந்துள்ளது.. இதனால் இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்…

இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.4,676-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.37,408-க்கு விற்பனைய செய்யப்படுகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் 10 காசு உயர்ந்து ரூ.62.50-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.62,500-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே துணிகர சம்பவம்..! ஜன்னலை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை..!

Fri Jul 8 , 2022
வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே கொள்ளையர்கள் ஜன்னலை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பர்மா காலனியை சேர்ந்தவர் ஆனந்த குமார். 61 வயதாகும் இவர், முன்னாள் பி.எஸ்.என்.எல். ஊழியர் ஆவார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். சம்பவத்தன்று இவரும், இவரது மகனும் வீட்டினுள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்துக்கு அறையில் எதோ சத்தம் கேட்டுள்ளது. ஆனால் அந்த […]

You May Like