தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ரூ.36,256-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தாலும், கடந்த 3 வாரங்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் ரூ. 3000 வரை குறைந்துள்ளது.
அந்த வகையில், தொடர்ந்து ஒரு வாரமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.13 உயர்ந்து, ரூ.4,532 ஆக உள்ளது. இதனால் சவரன் ஒன்றுக்கு ரூ. 104 உயர்ந்து, ரூ.36,256-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.30 காசுகள் உயர்ந்து ரூ.64.60 ஆகவும், வெள்ளி கிலோவுக்கு ரூ.64,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.