மகிழ்ச்சி செய்தி!!! வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை – 116 ரூபாய் குறைப்பு…

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சிலிண்டர் ஆகியவற்றின் விலையை இந்திய நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது.சர்வேதேச அளவில் நிலவும் கச்சா எண்ணையின் விலை மாற்றங்களை தொடர்ந்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 116 குறைந்து 1893 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டு சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமுமின்றி 1068.50 ரூபாயாக தொடர்கிறது.

Kathir

Next Post

பக்தர்கள் கவனத்திற்கு..!! திருப்பதியில் இன்று முதல் மீண்டும் அமல்..!! தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!!

Tue Nov 1 , 2022
திருப்பதியில் பக்தர்களுக்கு ’டைம் ஸ்லாட் டோக்கன்’ வழங்கும் நடைமுறை மீண்டும் நடைமுறைப்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. திருப்பதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், பக்தர்களுக்கான டோக்கன் வழங்கப்படாமல் நேரடியாக சுவாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அதனால், இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் […]

You May Like