விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்..!! மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு..!! முதல்வர் உத்தரவு..!!

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயப் பெருமக்களிடம் இருந்து முதலமைச்சருக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றது.

அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில் மொத்தம் 22,774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையில் இருந்து இரண்டு டிஎம்சி தண்ணீரை 3.02.2024 முதல் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே, விவசாயப் பெருமக்கள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser6

Next Post

"எத்தனை தோசை சாப்பிட்டாலும் வயிறு நிறையாது" சுவையான ஆந்திர காரசட்னி தோசை எப்படி செய்யணும் தெரியுமா.!

Sat Feb 3 , 2024
தற்போது பலரது வீட்டிலும் காலை மற்றும் இரவு உணவாக தோசை இட்லி தான் அடிக்கடி சாப்பிட்டு வருகிறோம். ஒரே மாதிரி தோசை, சட்னி செய்து கொடுத்தால் சாப்பிட பலருக்கும் பிடிக்காமல் காலை உணவை தவிர்த்து வருகின்றனர். இதற்கு பதிலாக இந்த ஆந்திர காரதோசை செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த தோசையை எப்படி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய் […]

You May Like