அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..!! சம்பளம் பிடித்தம் கிடையாது..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை 19 நாட்கள் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அரசுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் கிடையாது என தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், 19 நாட்களும் விடுமுறை நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Read More : ’பிரதமர் மோடியால் தமிழகத்தில் கால் செருப்பை கூட தொட்டு பார்க்க முடியாது’..!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

Chella

Next Post

கச்சத்தீவு விவகாரம்..!! முதன்முறையாக கருத்து தெரிவித்த இலங்கை..!! யார் காரணம்..?

Sat Apr 6 , 2024
இந்தியா வசம் இருந்த கச்சதீவானது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாகவும், அப்போதைய தமிழக அரசு பொறுப்பில் இருந்த திமுக இதற்கு உடந்தையாக இருந்தது என்றும் பாஜக சமீபத்தில் குற்றம்சாட்டியது. இது தொடர்பான தகவல் அறியும் உரிமை சட்ட அறிக்கையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். பிரதமர் மோடியும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், காங்கிரஸ் கட்சி காலத்தில் தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டினர். இந்நிலையில், இந்த […]

You May Like