மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!! வெளியான அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து பண்டிகைகள், திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கச்சபேஸ்வரர் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுற்று வட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள 11 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், இக்கோவிலை சுற்றி மிக அருகாமையில் அமைந்துள்ள 11 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

1newsnationuser6

Next Post

இறைவனின் மறு உருவமான விபூதியை பயன்படுத்துவதால் உடலில் இவ்வளவு நன்மைகளை ஏற்படுத்துமா.!

Thu Feb 1 , 2024
பொதுவாக கோயிலுக்கு சென்றாலே விபூதி மற்றும் குங்குமம் நெற்றியில் பூசாமல் வரமாட்டோம். அந்த அளவிற்கு விபூதி முக்கியத்துவமானதாக இருந்து வருகிறது. விபூதி என்றாலே செல்வம் மற்றும் இறைவனின் மற்றொரு உருவமாக நம்பப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் பெரியவர்கள் உடல் நலனில் ஏற்படும் நோய்களை விபூதியை மட்டும் பயன்படுத்தி குணப்படுத்தி வந்தனர். இவ்வாறு விபூதி பல்வேறு வகையான நோய்களையும் தீர்க்கும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. விபூதியை நம் நெற்றியில் வைக்கும் போது […]

You May Like