மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தக்கலை செய்கு பீர்முஹம்மது ஹாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டுவிழாவை முன்னிட்டு 06.02.2023 (திங்கட்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட உள்ளுர் விடுமுறைக்கு ஈடாக 2023 மார்ச் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (11.03.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தக்கலை செய்கு பீர் முஹம்மது ஹாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு விழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881(Under Negotiable Instruments Act 1881)-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

TVS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

Mon Feb 6 , 2023
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Lead Data Engineer, Design Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று […]

You May Like