குட் நியூஸ்..!! இன்னும் ஒரு வாரத்தில்..!! 4,308 செவிலியர்கள் நியமனம்..!! அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

இன்னும் ஒரு வாரத்தில் 4,308 செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்தாண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவியதால் அரசு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்தது. தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர்களை நியமித்து அவர்களின் பணிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் நீட்டிக்கப்பட்ட பணிக்காலம் முடிவடைந்த நிலையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு எதிராக தற்காலிக செவிலியர்கள் போராட்டம் ஈடுபட்டனர். இது குறித்து செவிலியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் 4,308 செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் செவிலியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Chella

Next Post

இன்ஸ்டாவில் மலர்ந்த கள்ளக்காதல்..!! ஆசையோடு வந்த கேரள பெண்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

Wed Feb 15 , 2023
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்து. இவருக்கு கடந்தாண்டு திருமணமான நிலையில், சிந்துவை தனது கிராமத்தில் தனியாக விட்டுவிட்டு கணவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில், சிந்துவுக்கும் கேரளாவைச் சேர்ந்த சமித் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இன்ஸ்டாகிராமில் பேசிய சமித் நான், தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நூற்பாலையில் […]

You May Like