”கூகுள் நிறுவனமே வெடித்து சிதற போகுது”..!! ஃபோனில் வந்த மர்ம கால்..!! பீதியை கிளப்பிய நபர்..!! நடந்தது என்ன..?

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள கூகுள் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா வளாகத்தில் கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவு 7.54 மணிக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், புனேவில் உள்ள கூகுள் நிறுவனத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, மும்பையில் உள்ள கூகுள் நிறுவன அதிகாரிகள் உடனடியாக மும்பை பெருநகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், இதுகுறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அந்த தொலைப்பேசி அழைப்பை கண்காணித்தனர். இதையடுத்து, வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு, மோப்பநாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு கூகுள் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்தச் சோதனையில் கூகுள் அலுவலகத்தில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

இது குறித்து புனே துணை போலீஸ் ஆணையர் விக்ரந்த் தேஷ்முக் கூறுகையில், “புனே கூகுள் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ஆய்வு செய்தோம். இதில், வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அழைப்பு போலியானது என்பது தெரியவந்தது. அழைப்பு செய்தவர் குறித்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அது ஹைதராபாத் என்பது தெரியவந்தது. அந்த எண்ணுக்குரிய முகவரியை தொடர்பு கொண்டபோது, அந்த அழைப்பு செய்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஹைதராபாத் போலீஸாருடன் இணைந்து புனே போலீஸாரும் ஈடுபட்டு வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

Chella

Next Post

”பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கு”..!! இலங்கை ராணுவம் அறிவிப்பு..!!

Mon Feb 13 , 2023
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் அளித்த பேட்டியால் பெரும் பரபரப்பு கிளம்பிய நிலையில், பிரபாகரன் உயிருடன் இல்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பழ.நெடுமாறன், பிரபாகரன் தொடர்பான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ”பிரபாகரன் குடும்பத்தினர் தம்முடன் தொடர்பில்தான் இருக்கின்றனர். பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். பிரபாகரன் தற்போது நலமுடன் இருக்கிறார். பிரபாகரன் விரைவில் வெளியே வருவார். பிரபாகரன் அனுமதியுடன் இதனை […]

You May Like