தவறாக பதிலளித்ததால் 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு இழப்பு… இது என்ன கூகுளுக்கு வந்த சோதனை..!

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட Bard என்ற சாட்போட், கேள்வி ஒன்றுக்கு தவறான பதில் அளித்ததால் 100 மில்லியன் டாலர் சந்தை மதிப்பை கூகுள் நிறுவனம் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால், சாட்ஜிபிடி(ChatGPT) எனப்படும் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் பயன்பாடு நாளுக்கு நாள் பிரபலமாகி வரும் நிலையில், பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.சாட்ஜிபிடி அறிமுகமான இரண்டே மாதங்களில் 10 கோடி பயனர்களைப் பெற்றது. இதேபோல் கடந்த வாரத்தில் chat.openai.com என்ற இணையதளம், தினசரி 2.5 கோடி பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்தது. இதற்கு காரணம் கூகுளை போன்று ஒரே நேரத்தில் பல தகவல்களை சாட்ஜிபிடி மூலம் திரட்ட முடியும். இந்தநிலையில், இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் Bard என்ற சாட்போட்டை உருவாக்கியது. இந்த சாட்போட்டிற்கான விளம்பர வீடியோவை கூகுள் வெளியிட்ட நிலையில், பார்ட் சாட்போட் அளித்த பதில்கள் தவறாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

செய்திகளின்படி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி குறித்த கேள்வி ஒன்றுக்கு பூமியின் சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தின் படத்தை முதன்முறையாக எடுத்தது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி என பார்ட் சாட்போட் பதிலளித்ததாகவும், ஆனால் அதற்கு சரியான விடை 2004ல் ஐரோப்பிய தெற்கு கண்காணிப்பகத்தின் மிகப்பெரிய தொலைநோக்கி தான் அந்த படத்தை முதன்முதலில் எடுத்தது. இதை நாசா உறுதிசெய்தது. என சொல்லப்பட்டது. இதையடுத்து பார்ட் சாட்போட் தவறான பதிலளித்துள்ளது என செய்திகள் வைரலாக தொடங்கியது. இதையடுத்து, சாட்ஜிபிடி பிரபலமானது. இதையடுத்து, கூகுள் பங்கு விலை ஒரே நாளில் 9 சதவீதம் சரிந்தது. இந்த சரிவால், கூகுள் நிறுவனம் 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்துள்ளது. மேலும், கூகுள் நிறுவனத்தின் இந்த சரிவால் மைக்ரோசாஃப்ட் பங்கு விலை 3 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

டிகிரி படித்தவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் ₹ 18,536 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

Thu Feb 16 , 2023
திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அங்கு காலியாக உள்ள சமுதாயப் பணிக்கான காலி இடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 28.02.2023 தேதிக்குள் திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் சென்று சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத்துறை மிசன் வாட்சால்யா திட்டத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு […]

You May Like