’இன்றிரவுக்குள் அதிபர் பதவியை ராஜினாமா செய்கிறார் கோத்தபய ராஜபக்ச’..! – சபாநாயகர்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று இரவுக்குள் ராஜினாமா செய்துவிடுவார் என்று சபாநாயகர் மகிந்த யாப அபேவர்த்தனா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ”இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தன்னுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்று இரவுக்குள் ராஜினாமா கடிதம் உங்களுக்கு கிடைக்கச் செய்வேன் என கோத்தபய ராஜபக்ச தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் புதிய அதிபர் திட்டமிட்டபடி வரும் 20ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று உறுதி அளித்துள்ள சபாநாயகர், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவசரமாக கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டிய சபாநாயகர் - தமிழ்வின்

இதற்கிடையே, பாதுகாப்புப் படையினரின் எதிர்ப்பையும் மீறி, கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளனர். கட்டடத்தின் உச்சிக்குச் சென்ற அவர்கள் அங்கு இலங்கை தேசிய கொடியை நிறுவி பறக்கவிட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Chella

Next Post

செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர்..! வரும் 28ஆம் தேதி சென்னை வருகை..!

Wed Jul 13 , 2022
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க, ஜூலை 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.  கொரோனா தொற்று காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த போட்டியில் இந்தியாவும்-ரஷ்யாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. இந்தாண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. ரஷ்யாவில் நடைபெற இருந்த விளையாட்டுப் போட்டிகளை உக்ரைன் மீதான போர் காரணமாக அங்கு நடத்தப்படமாட்டது என்று சர்வதேச செஸ் […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர்..! வரும் 28ஆம் தேதி சென்னை வருகை..!

You May Like