விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை வாடகைக்கு விட தனியார் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

ஊரடங்கு தளர்வு ஏற்ப்பட்ட நிலையிலும் 60 சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்க அனுமதி உள்ள நிலையிலும் மக்கள் பெரும்பாலும் இந்த சேவைகளை பயன்படுத்துவதில்லை. இதனால் போதிய வருமானம் இல்லாத இந்த சூழலில் அரசு பேருந்துகளை தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட விழுப்புரம் கோட்டம் முடிவுக்கு வந்ததுள்ளது.
இதன்படி கடலூர் கோட்ட மேலாளர் சுந்தரம் தலைமையில் குழு அமைக்கபட்டு செயல்முறை படுத்தப்பட்டு வருகிறது. பணியாளர்களுக்கு சேவை செய்ய விரும்பும் தனியார் நிறுவனங்கள் காலை மாலை அவர்களை அலுவலகம் கூட்டி செல்லவும், வீட்டில் விடவும் அரசு பேருந்துகளை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் பொது மக்கள்களும் குழுவாக பயணிக்க அனுமதிக்கப்பட்ட மண்டலங்களுக்கு இடையிலோ, அல்லது இ-பாஸ் பெற்று பயனிக்கவோ இந்த வாடகை பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை தேவைபாடுவோர் 94450 21211 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.