1 News Nation aims to deliver latest and breaking News in Tamil. Apart from Live news, this website provides Political News in Tamil, Kollywood News in Tamil, Sports News in Tamil, Lifestyle news in Tamil, Google tamil news, Astrology in Tamil, Health updates in Tamil and News stories in Tamil. Check out for the latest news updates in Tamil and current happenings in Tamil only in One News Nation.
புலம்பெயர் தொழிலாளிகள் ஊரடங்கால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இத்தகைய நிலைக்கு காரணம் மத்திய அரசின் நிர்வாகத்திறமையின்மைதான் என பலர் கூறி வருகின்றனர். இதுகுறித்து நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராமில் தேனீக்களிடம் இருந்து அரசு பாடம் கற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிறுப்பதாவது, “என் வீட்டுக்கு வெளியே உள்ள மரத்தில், தேனீக்கள் பெரிய கூடு ஒன்றை கட்டி இருந்தது. அவற்றை பார்த்து நான் பயந்தேன். ஆனால் நான் தேனீக்களுக்கு எதிரானவள் அல்ல. நான் அவற்றினால் கடிக்கப்படக்கூடாது என்பதற்காக அவற்றை எந்த துன்புறுத்தலுமின்றி வேறு இடத்துக்கு நகர்த்த சிலரை அழைத்தேன். என் முன்னால் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று அவற்றின் மீது பூச்சிக் கொல்லி அடித்து அவற்றை கொல்வது, இன்னொன்று அவற்றோடு வாழப் பழகிக் கொள்வது. எனது பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான தேனீக்களை கொல்வதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. இந்த உயிரினங்கள் மீது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாக உணர்கிறேன். ஏனெனில் நம் சுற்றுசூழல் அமைப்பில் அவற்றின் பங்கு இன்றியமையாதது. தேனீக்கள் அழிந்தால், அடுத்து அழியப்போவது மனிதர்கள் தான். இது தேனீக்களை பற்றிய கதைதான் என்றாலும், இது நம் நாட்டில் நடக்கும் புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினையை பற்றியதும் தான். என் பால்கனியில் இருக்கும் தேனீக்களுக்கு நான் பொறுப்பென்றால், நம் நாடு முழுவதும் நிர்கதியாகியுள்ள லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் தானே பொறுப்பு. ராணி தேனீ மிகவும் புத்திசாலி. தனது தொழிலாளி தேனீக்கள் இல்லாமல் தான் இல்லை என்பது அதற்கு தெரியும், தேன் கூடு சிறப்பாக இயங்க வேண்டுமென்றால் தொழிலாளி தேனீக்கள் அதற்கு வேண்டும். தேனீக்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என பதிவிட்டுள்ளார்.
தேசத்திற்கு எதிராக செயல்படும் அனுஷ்கா சர்மாவை விராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் என, பாஜக எம்எல்ஏ ஒருவர் வலியுறுத்தி உள்ளார். இந்தியா ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி மற்றும் பிரபல நடிகையுமான அனுஷ்கா சர்மா, தனது அண்ணனுடன் சேர்ந்து தயாரித்த “பாதல் லோக்” எனும் இணைய தொடர் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. அரசியல் மற்றும் மதம் சார்ந்த பல்வேறு சம்பவங்களை மையமாக கொண்டு […]