நகர்புறங்களில் வார்டு கமிட்டி ஏரியா சபை அமைக்க: தமிழக அரசு விதிகளை அறிவித்தது…!

தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் வார்டு கமிட்டி, மற்றும் ஏரியா சபை அமைப்பதற்கு வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் அல்லது தலைவர், நிலைக்குழு தலைவர், மண்டல தலைவர் பேன்ற பதவிகள் உள்ளன. இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்த வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை அமைப்பதற்கான விதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு வார்டில் உள்ள ஏரியாக்களின் அடிப்படையில் வார்டு கமிட்டி உறுப்பிர்களை நியமிக்கலாம். இதற்கு தலைவராக அந்த வார்டின் கவுன்சிலர் இருப்பார். மூன்று மாதத்திற்கு ஒரு முறை வார்டு கமிட்டி கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

மாநகராட்சிகளில், ஐந்து லட்சம் வரை மக்கள் தொகை உள்ள வார்டுகளில், நான்கு முதல் ஐந்து ஏரியா சபைகள் இருக்கலாம். ஐந்து முதல் பத்து லட்சம் வரை மக்கள் தொகை உள்ள வார்டுகளில் ஆறு முதல் ஒன்பது ஏரியா சபைகள் இருக்கலாம். பத்து லட்த்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள வார்டுகளில் பத்து ஏரியா சபைகள் அமைக்கலாம். நகராட்சிகளில் ஒரு வார்டில் நான்கு சபைகளும், பேரூராட்சியில் ஒரு வார்டில் மூன்று சபைகளும் அமைக்கலாம். இந்த கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். மேலும் வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபைகள், தங்களின் வார்டுக்கு தேவையான திட்டங்களை குறித்த பரிந்துரைகளை நிறைவேற்ற கோரி அளிக்கலாம். பொதுமக்களின் குறைகளை மன்றத்தில் தெரிவித்து அதற்கான தீர்வு காணலாம்.

Baskar

Next Post

தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும்..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Tue Jul 5 , 2022
தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முதியோர் இல்லங்களைக் கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்கக் கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, முதியோர் இல்லங்களை ஆய்வு செய்வது, பதவி செய்யப்படாவிட்டால் நடவடிக்கை எடுப்பது, பதிவு செய்வது கட்டாயம் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், […]
குட் நியூஸ்..!! ’ஓய்வூதியதாரர்களுக்கு நிரந்தர தீர்வு’..!! மத்திய அரசு வெளியிட்ட புதிய திட்டம்..!!

You May Like