தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மாதந்திர காப்பீடு பிடிப்பு தொகை வரும் ஜூலை முதல் ரூ.230 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், அரசு ஆசிரியர்களுக்கு சுகாதார காப்பீட்டு தொகையாக இதுவரை மாதம் ரூ.180 பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்கள் குறிப்பிட்ட மருத்துவ மனைகளில் சிகிச்சைக்கான தொகையை திரும்ப பெற்று கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அல்லது இலவச சிகிச்சையை காப்பீடு மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
இதன் மூலம் பயனாளர்கள் ஆண்டுக்கு நான்கு லட்சம் ருபாய் வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும். தற்போது கொரோனாவால் ஏற்ப்பட்டுள்ள மருத்துவ செலவுகளையும் இதில் பெற வகை செய்துள்ளதால் இந்த காப்பீடு தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
மேலும் அதிக அளவில் தனியார் மருத்துவமனைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இதில் இணைக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் சிகிச்சை முடித்ததும் தகுந்த ஆவணங்களை கொண்டு தொகையை திருப்பிக் கொள்ளலாம்.
இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ள நிதித்துறை கூடுதல் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மாதாந்திர காப்பீடு பிரீமியம் ரூ.180 லிருந்து ரூ.50 உயர்ந்தப்பட்டு ரூ.230 ஆக இனி பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.