லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெறாமல் இருப்பதற்கு ஆளுநர் மட்டுமே காரணம்..!! – அமைச்சர் பொன்முடி..!!

பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர்களை அழைக்க வேண்டும் என்பதற்காகவே தேதி கொடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக 1,87,693 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட, நடப்பாண்டில் 18,610 விண்ணப்பங்களாக அதிகரித்துள்ளது. 7.5% இட ஒதுக்கீட்டில் 7,582 மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். சலுகைகளின் காரணமாக மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 394 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவில் 5,024 விண்ணப்பங்கலும் வந்துள்ளன

நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 15ஆம் தேதியாவது வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஜூலை 2ஆம் தேதி முதல் நடத்த திட்டமிட்டுள்ளோம். பொறியியல் கல்லூரிகளின் கட்டமைப்புகளை ஆய்வு செய்து வருகிறோம். பொறியியலில், 9 லட்சத்து 25 ஆயிரம் பேர் படித்து முடித்து பட்டம் வாங்காமல் காத்திருப்பதாகவும், ஆளுநர் எப்போது தேதி கேட்டாலும் நாங்கள் கொடுத்து விடுவோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர்களை அழைக்க வேண்டும் என்பதற்காகவே தேதி கொடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார் என கூறிய அவர், தமிழ்நாட்டில் உள்ளவர்களை சிறப்பு விருந்தினர்களாக வைத்து பட்டமளிப்பு விழாக்களை ஆளுநர் உடனடியாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், பாரதியார் பல்கலைக்கழ துணைவேந்தர் பொறுப்பிற்கு 3 பெயர்களை பரிந்துரை செய்து வழங்கியுள்ளதாகவும், ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாகவும் அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டினார்.

CHELLA

Next Post

நஞ்சாக மாறும் 7 உணவுகள் - தவிர்ப்பது எப்படி??

Thu Jun 8 , 2023
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர், ‘உண்ட பின் நஞ்சாக மாறும்’ (Food Poison) உணவினால் பாதிக்கப்படுவதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட 340 குழந்தைகள் உணவினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் தினமும் உயிரிழக்கிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.அடிக்கடி ‘உண்ட பின் நஞ்சாகும்’ உணவுப் பொருட்கள் எவை என்பது பற்றியும் உணவில் தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் பார்ப்போம்.அமெரிக்காவில் செயல்படும் […]

You May Like