
திருப்பதி : கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக 83 நாட்களாக மூடப்பட்டிருந்த திருப்பதி கோவில் தரிசனம் மீண்டும் தொடங்கியதால் பக்தர்கள் ஆர்வத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டுவருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவுவதை கட்டுபடுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில், கோயில், பள்ளிவாசல், தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பின் படி, நிபந்தனைகளுடன் திருப்பதி கோவிலில் இன்று காலை முதல் பொது தரிசனம் தொடங்கியுள்ளது. தரிசனத்திற்கான 3000 டிக்கெட்டுகள் 300 ரூபாய்க்கு ஆன்லைனில் விற்கப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் உள்ளிட்ட விடுதிகளில் உள்ள கவுண்டர்களில் 3000 இலவச டோக்கன்கள் நேற்று வழங்கப்பட்டது.

திருப்பதியில் 83 நாட்களுக்கு பின் நீண்ட வரிசையில் நின்று பொது தரிசனம் மேற்கொள்ள வந்த மக்கள் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் உற்சாகமாய் சாமி தரிசனம் மேற்கொண்டனர். அரசுகளின் அறிவிப்பின் படி, கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கோனிங் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.